Thursday, January 6, 2011

Healing Touch Therapy

ஆறுதலான வருடல்கள் வலியைக் குறைக்கும்


 
 வலியிருக்குமிடத்தில் ஆறுதலாக யாராவது தடவிக் கொடுத்தால் அது இதமாகவும் வலியைக் குறைப்பதாகவும் தெரிவது பொய்யல்ல, அது நிஜம் என்று ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதமாக
வருடும் உணர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்வதற்கென்றே நரம்புகள் தனியாக இருக்கின்றன என்று கண்டுபிடித்தனர். இந் நரம்புகள் வலியிருக்குமிடத்திலிருந்து வலி உணர்வை கொண்டு செல்லும் நரம்புகளால் தடை செய்யப்படுவதில்லை, மாறாக இந்த தொடுஉணர்வு நரம்புகள் வலி நரம்புகளை தடை செய்கின்றன.
அன்பு, பரிவுடன் இதமாகத் தொட்டு தடவிக் கொடுத்தால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல எல்லா வயதினருக்கும் வலி பறந்துவிடும். இதைவிட மலிவான மருந்து என்ன இருக்கிறது

பெண்களுக்கு தொடுஉணர்ச்சி அதிகம்


   ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத் தொடு உணர்ச்சி கூர்மையாக உள்ளது என்பதை நரம்பியல் அறிஞர்கள் ஏற்கனவே அறிந்திருந்தனர். ஏன் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆண்ட்டோரியோ பல்கலைக்கழக அறிஞர்கள் 100 ஆண், பெண்களை வைத்து ஆராய்ந்தனர்.
   மெல்லிய வரி வரிகளாக உள்ள மேடுகளை தொட்டு உணரும்படி செய்ததில் மிகவும் நெருக்கமாக உள்ள மேட்டு வரிகளை ஆண்களால் உணர முடியவில்லை. பெண்கள் எளிதில் அதை உணர்ந்தனர். இதற்குக் காரணம் பெண்களின் விரல்கள் ஆண்களைக் காட்டிலும் சிறிதாக இருப்பதே.
   தொடு உணர்ச்சிகளுக்காக பலவகை நரம்பு செல்கள் தோலில் உள்ளன. சிறிய மேடுகளை அறிவதற்கு மெர்கெல் (Merkel cells) வகை நரம்பு முனைகள் உதவுகின்றன. இவை வியர்வை சுரப்பிகளுக்கருகேதான் அதிகம் காணப்படுகின்றன. பெண்களுக்கு விரல்கள் சிறிதாக இருப்பதால் மெர்கெல் செல்கள் கைவிரல்களில் அதிகமாகவும், வியர்வைத் துளைகளும் அதற்கேற்ப அதிகமாகவும் இருப்பதால் அவர்களின் தொடு உணர்ச்சி கூர்மையாக உள்ளது

2 comments: