Wednesday, December 29, 2010

Male reproductive anatomy

     நாங்கள்தான் விரைகள் பேசுகின் றோம். எங்களைப் பற்றி இந்த ஆண்களுக்கு எப்போதுமே இரண்டு விதமான எண்ணம், ஒரு புறம் அவர்களது ஆண்மையின் அறிகுறி என்று எங்களைச் சொல்வார்கள். மறுபுறம் எங்களைப் பற்றிய பேச்சை எடுக்கவே வெட்கப்படுவார்கள். இந்த இரட்டை வேஷத் தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். உடலில் உள்ள வேறு எந்த உறுப்புக்கும் நாங்கள் இளைத்தவர்கள் இல்லை. சொல்லப் போனால் எங்கள் சக உறுப்புக்கள் பலரினும் நாங்கள் இளைத்தவர்கள் இல்லை. சொல்லப் போனால் எங்கள் சக உறுப் புக்கள் பலரினும் நாங்கள் மேம்பட்டவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அது எப்படி என்றா கேட் கிறீர்கள். நாங்கள் மட்டும் இல்லையென்றால் நீங்கள், உங்கள் மூதாதையர்கள் எவருமே இருந்திருக்க முடியாது. மனித இனமே தொடர்ந்திருக்க முடியாது.

    இந்த
விதத்தில் இயற்கை உங்களை விடக் கெட்டிக்காரத்தனமாக இருந்திருக்கிறது. அதனால் பெரும்பாலான சுரப்பிகளிலும் ஒன்றைப் படைத்தது எங்களில் மட்டும் இரண்டைப் படைத் திருக்கிறது. இன்னொரு கஷ்டம் என்னவென்றால் எங்களைப் பற்றிப் பேச்செடுக்கின்ற போதெல்லாம் செக்ஸ் பற்றிப் பேசுவதாகப் பலர் நினைக் கிறார்கள். செக்ஸ்க்கு மட்டும்தானா நாங்கள் உதவு கின்றோம் ? எத்தனை எத்தனை வேதி மாற்றங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் நாங்கள் செய்கிறோம். பெண் குழந்தையைப் போல் பேச்சும் உருவமும் கொண்டிருந்த சிறுவனை ஆண்மகனாக ஆக்கியதும் நாங்கள் தான். அவர்களது முதுமைக் காலத்தில் தொல்லை தராமல் இருக்க வேண்டியவர்களும் நாங்கள் தான். இது தான் எங்களைப் பற்றிய அடிப்படை விவரம். மீதியை இதோ இருக்கின்ற இடது விரை சொல்லுவான்.

   நான்தான் இடது விரை (left Testis). பார்ப்பதற்கு நான் ஒன்றும் அவ்வளவு குரூபி அல்ல. ஓவல் வடிவில், கோதுமை நிறமும், பளபளப்பும் கொண்ட எனது எடை சுமார் 4 கிராம், நீள் வாட்டில் 4 செ.மீ. நீளமுள்ள எனது குறுக்களவு 2 செ.மீ. ஆகும்.

   எனக்கு இடப்பட்ட பணி இருவகைப் படும். இனப்பெருக்கத்திற்கு உதவுகின்ற விந்தணுக்களை (Sperm) உற்பத்தி செய்வது ஒன்று, ஆண்மைக்கு அடித்தளம் அமைக்கின்ற டெஸ்ட்டோஸ் டீரான் (Testosterone) என்னும் ஹார்மோ னைச் சுரப்பது மற்றொன்று. இந்த ஹார்மோன் தான் உடல் தசைகள் ஓங்கி வளரவும், திசுக்களும், எலும்புகளும் திறன் பெறவும் உதவுவது. இந்த ஹார்மோன் இல்லா விட்டால் ஆண் களுக்கு மனத் துணிவும், வேகமும் குறைந்து போவதுடன் அவர்கள் பெரு மையடித்துக் கொள்ளும் மீசையும் தாடியும் வளராமல் போய் விடும்.

ஒருபல்திறக் கூட்டான (Complex)



  இயந்திரத்தை ஒத்தவன் நான். என்னைப் போல் பிற உறுப்புகள் செயல்படுவதென்பது மிகக் கடினம். மிக மெல்லிய பட்டு இழை (Silk thread) பார்த்திருக்கிறீர்களா ? அது போல் 30 முதல் 40 செ.மீ. நீளம் உள்ள மென்மையான ஆயிரம் சிறுகுழாய்கள் என்னுள்ளே இருக்கின்றன. இவைகள் அனைத்தும் தங்கள் உற்பத்திப் பொருளை 6 மீட்டர் நீளமுள்ள குழாயில் கொண்டு வந்து சேர்க் கின்றன. இந்தக் குழாய்களின் அமைப்பில் தான் நான் நாளொன்றுக்கு 5 கோடி விந்தணுக்களை உற்பத்தி செய்கிறேன். அதாவது ஒவ்வொரு இரண்டு மாதங்களிலும் உலக மக்கள் தொகைக்கு ஈடான விந்தணுக்களை உண்டாக்குகின்றேன்.

   இவற்றில் ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்றோதான் தற்போதைய ஆணின் வாழ்வில் தேவைப்படக்கூடும். அப்படியானால் கோடிக் கணக்கான விந்தணுக்கள் ஏன் உற்பத்தி செய்யப்பட வேண்டுமென்றுதானே கேட்கிறீர்கள்? உலகம் தோன்றிய காலத்தில் இனப்பெருக்கம் அவ்வளவு எளிதாக இல்லை. அதை ஈடு செய்வதற்காக இயற்கை செய்த தந்திரம். இது. அறிவியல் முன்னேற்றம் மிகுந்திருக்கும் இக்காலத்தில் இது அனாவசியம் என்று தோன்றுகிறது.

   இந்தக் குழாய் அமைப்பு (Duct system) தவிர என்னுள்ளே கோடிக்கணக்கான லேடிக் (Leydig) செல்களும் உள்ளன. டெஸ்ட்டோஸ் டீரான் என்னும் ஆண் ஹார்மோனைச் சுரக்கின்றவை இந்தச் செல்கள்தான். இதில் ஒரு அதிசயம் என்ன வென்றால் இந்த ஆண்மை ஹார்மோன் பெண்கள் உடலிலும் சுரக்கிறது. ஆண்களிடம் சுரக்குகின்ற இந்த ஆண் ஹார்மோனில் 20-ல் ஒரு பங்கு அவர்களது மனைவியர்களின் இரத்த ஓட்டத்தில் இருக்கிறது. இதை அட்ரீனல் சுரப்பி சுரக்கின்றது. இது இல்லாமல் போகுமானால் பெண்களுக்கு உடலுறவில் விருப்பம் இன்றிப் போய்விடும். அது மட்டுமன்றி ஆண்தன்மை அதிகரிக்கவும் கூடும்.

   ஆண் குழந்தை தாயின் கருப்பையில் இருக்கின்ற போது நாங்கள் குழந்தையின் உடலுக்குள் இருப்போம். குழந்தை பிறக்க இரண்டு மாதங்கள் இருக்கும் போது மெதுவாக இறங்கி வெளிப்படுவோம். நாங்கள் மாத்திரம் இறங்கி வெளியே வராமல் உள்ளே தங்கிவிடுவோ மானால் அந்தப் பையன் மலடாகி விடுவான். அதன் காரணத்தைக் கேட்டால் ஆச்சரியப் படுவீர்கள்.

   மனிதர்களின் உடலின் இயல்பான வெப்பம் (Normal temperature) 98.60 பாரன்ஹீட் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த வெப்பத்தில் என்னால் விந்தணுக் களை உற்பத்தி செய்ய முடியாது. எனது வெப்பம் உடல் வெப்பத்தை விட 3 டிகிரி குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் என்னால் செயல் பட முடியும். இதற்காகவே என்னைச் சுற்றி ஒரு ஏர் கண்டிஷன்ட் அமைப்பே உள்ளது. உடலுக்கு வெளியே ஒரு குளிர்ந்த பையில் நாங்கள் தொங்க விடப்பட்டிருக் கிறோம். இந்தப் பையில் ஏராளமான வியர்வைச் சுரப்பிகள். இவைகள் ஈரப்பசையை ஆவியாக்கி எங்களைக் குளிர்ந்த நிலையில் வைக்க வல்லவை. ஆண்கள் வெந்நீரில் குளிக்கும் போது நாங்கள் விரைந்து கீழே இறங்கிவிடுவதன் காரணம் அந்த வெப்பத்தை எங்களால் தாங்க இயலாது. இப்போது புரிகிறதா ஏன் நம் முன்னோர்கள் ஈரக் கோவணம் கட்ட வேண்டுமென்று சொன்னார்கள் என்பது.



   நாங்கள் உற்பத்தி செய்கின்ற விந்த ணுக்கள் மிக விந்தையானவை. உடலிலேயே மிகச்சிறிய செல்கள் அவை தான். சக்தி மிக்க உருப்பெருக்கியின் மூலம் பார்த்தால் இந்த விந்தணுக்கள் தவளையின் தலைப்பிரட்டை (Tadpote) வோல் தலையும் வாலும் கொண்டு இருக்கும். இந்த வாலைச் சுழற்றி சுழற்றி அவை நகர வல்லவை.

   இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு. உடலிலுள்ள செல்கள் ஒவ் வொன்றிலும் 46 குரோமோசோம்கள் இருக்கின்ற போது இந்த விந்தணு செல் களில்மட்டும் 23 குரோமோசோம்கள் தான் இருக்கும். அதாவது மீதி 23 குரோமோ சோம்கள் பெண் முட்டையிடும் இருந்து பெறப்பட வேண்டும் எனது விந்தணுக் களில் ஆண் குழந்தையை உண்டுபண்ணும் ‘வ’ குரோமோசோம்களும், பெண் குழந்தையை உண்டு பண்ணும் ‘ல’குரோமோசோம்களும் உள்ளன. ஆனால் பெண்ணின் முட்டையில்

   ‘X’குரோமோ சோம்கள் மட்டுமே இருக்கும். எனது விந்தணுவிலுள்ள ‘y’ குரோசோம் முட்டை யோடு இணைக்கின்ற போது ‘XY’ குரோசோம் ஆக உருப்பெற்று ஆண் குழந்தை உண்டாகிறது. அவ்வாறின்றி ‘X’ குரோம்சோம் முட்டையுடன் இணைக்கின்ற போது ‘XX’ குரோம்சோம் உடைய பெண் குழந்தை உண்டாகிறது. எனவே ஆண் குழந்தை பிறப்பதற்கும் பெண் குழந்தை பிறப்பதற்கும் ஆண்களின் விந்தணுவே காரணமேயின்றிப் பெண்கள் காரணமில்லை.

   இது தவிர குரோம்சோம்களிலுள்ள ஜீன் களின் மூலமாகவே மரபுப் பண்புகளும், சிறப்பியல்புகளும் குழந்தைகளுக்குச் செல்கின்றன.

   ஒரு மணிநேரத்தில் 18 செ.மீட்டர் தூரம் செல்லக்கூடிய இந்த விந்தணுக்கள், ஒரு முட்டையைச் சூழ்ந்து கொண்டு உள்ளே செல்ல முயல்வது ஒரு அரிய விந்தையாகும். முட்டையின் கடினமான ஓட்டினை நான் சுரக்கின்ற ஒரு நொதியின் துணை கொண்டு மென்மையாக்கி உள்ளே நுழைய முயல்கின்ற கோடிக்கணக்கான விந்தணுக்களில் ஒன்று தான் வெற்றியடையக் கூடும்.

   விந்து வெளியேறுவது நீண்ட நாட்களுக்குத் தடைப்படுமாயின் விந்தணுக்கள் அனைத்தும் காலம் முதிர்ந்து இறக்க நேரும். அவ்வாறின்றி அடிக்கடி வெளியேற்றப் படுமானால் முதிர்ச்சி இல்லாத நிலையில் வெளியாகும் அவைகளால் முட்டையைக் கருவுறச் செய்ய இயலாது போகும்.

   அடுத்தடுத்து விந்து வெளியேற்றப் படுகின்ற போது (நாளொன்றுக்கு இரண்டு முறை வீதம் பத்து நாட்களுக்கு) விந்து நீர்மமாக (Watery) ஆவதுடன், அதில் விந்தணுக்களே இல்லாமலும் போகலாம். அவ்வளவு விரைவாக என்னால் உற்பத்தி செய்ய முடியாது. மணமாகிச் சில காலம் குழந்தை இல்லாத தம்பதியர் அடிக்கடி உடற்சேர்க்கையில் ஈடுபட்டால் குழந்தை உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று தவறாக எண்ணுவதுடன் அதைச் செயல்படுத்தவும் முனைகின்றனர். மாறாக ஓரிரு வாரங்கள் இடைவெளி விட்டுச் சேர்க்கையில் ஈடுபடு வார்களானால் குழந்தை உருவாகப் பெரிதும் வாய்ப்புண்டு.

   சாதாரணமாக ஒரு முறை விந்து வெளி யாகும் போது சுமார் 60 கோடி விந்தணுக்கள் வெளியேறுகின்றன. ஆண்களின் புராஸ்டேட் என்னும் உறுப்பிலிருந்தும், (Prostate) செமினல் வெசிகில் (Seminal Vesicle) என்னும் உறுப்பிலிருந்தும் சுரக்கின்ற சுமார் 5 மி.லி. நீர்மப் பொருளில் இந்த விந்தணுக்கள் மிதக்கவிடப்பட்டுள்ளன. இந்த நீர்மம் மிதவையாக மட்டுமன்றி, விந்தணுக்களுக்கு உணவாகவும் சர்க்கரை, புரதம் மற்றும் கனிமப் பொருள்கள் மிகுதியாக உள்ளன.

   சிறுவர்கள் 14 வயது அடைகின்ற வரை நாங்கள் அமைதியாக அடங்கிய நிலையில் இருப்போம். அதன் பின்னர் மூளையில் அமைந்துள்ள பிட்யூட்ரி சுரப்பி எங்களுக்குச் சமிக்ஞைகளை அனுப்பி எங்களைச் செயல்பட வைக்கிறது. இந்தப் பிட்யூட்ரி ஹார்மோன்களில் ஒன்று, விந்தணுக்களை உற்பத்தி செய்யவும் மற்றொன்று டெஸ் டோஸ்டீரான்கள் சுரக்கவும் தூண்டு கிறது.

   இந்த டெஸ்ட்டோஸ்டீரான் ஒரு வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone). இந்த நீர்மத்தில் செயல்பாட்டினால்தான் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் சிறுவர்கள் விரைந்து வளர்ந்து, குரல் தடித்து, மீசை அரும்பி இளைஞர்களாக மாறுகின்றனர். அது மட்டுமன்றி, அவர்களது மனப்பாங்கும் மாறுகிறது. தன்னம்பிக்கையும் துணிவும் உண்டாகிறது.

   செக்ஸ் எனப்படும் பாலுணர்வுக்கு மட்டும் எனது ஹார்மோன்கள் பயன்படு கின்றன என நினைப்பது தவறு. டெஸ்ட் டோஸ்டீரான் (Testostrone) இல்லாவிட்டால் உங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போகும். உணர்வுகள் மாறுபடும். சினமும், ஆத்திரமும் தூக்கமின்மையும் ஏற்படும். மாதவிலக்கு நிற்கின்ற நேரத்தில் பெண்களுக்கு ஏற்படுவது போன்ற படபடப்பும் எரிச்சலும் ஏற்படும்.

   ஒரு ஆணுடைய 25 முதல் 35 வயது வரை நாங்கள் மிகச் சிறப்பாக வேலை செய்து அதிக அளவு ஹார்மோனைச் சுரக்கிறோம். 45 வயதுக்கு மேல் இது படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கிறது. 60 வயதை எட்டும் போது சுரப்பு கணிசமாகவே குறைந்து விடுகிறது. என்றாலும் அடிப்படைத் தேவைகளுக்கான அளவு சுரப்பு இருக்கும்.

   ஆணுக்கு 90 வயது ஆனாலும், நாங்கள் விந்தணுக்களை உற்பத்தி செய்து கொண்டுதான் இருப்போம். ஆனால் தேவையான அளவில் இல்லாமல் இருக்கலாம். வெளியே இருந்து ஹார்மோன் எடுத்தால் உதவியாக இருக்குமா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அது அவ்வளவு தூரம் வெற்றியடைந்ததாகத் தெரியவில்லை. இது தவிர எனக்காக எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை. இயற்கையில் நீங்கள் நல்ல உடல் நலம் உடையவராய் இருந்தால் மட்டும் போதும். நாங்கள் எங்கள் பணியைச் செவ்வனே செய்வோம்.
                                   

6 comments:

  1. Very usefull advice

    ReplyDelete
  2. மிக அழகாக விளக்கப்பட்ட ஒரு கட்டுரை. இதில் எவ்வித ஆபாசமும் இல்லை. இவைகள் எல்லாம் நமக்கு தேவையான அடிப்படை அறிவு கருவூலம்.
    நன்றி.

    ReplyDelete
  3. pls write in english

    ReplyDelete
  4. sir oru kelvi enkku oru virai than iruku only left ithenala propulam varuma ??????????????

    ReplyDelete