மது போதையில் மூழ்கியவரும் செக்ஸ் போதையில் மூழ்கியவரும் மீள்வது கடினம். உண்மை நிலை இப்படியிருக்கும்போது செக்ஸ் போதையை அதிகரிக்க மதுபோதை உதவுவதாக கருதுவது அறியாமை.
போதைப்பழக்கம் காலம்காலமாய் நீடிக்கிற ஓர் சமூகக்கேடு. மவுரியர்கள் காலத்தில் பலவித போதையூட்டும் பானங்களும் போதையற்ற பானங்களும்
நிரம்பி வழிந்துள்ளன. ஏராளமான மக்கள் மதுபானங்களை பெருமளவு பருகியதால் அரசாங்கமே சாராயத் தொழிலைத் தொடங்குவதற்கு இட்டுச் சென்றது என்று கவுடில்யரின் அரத்தசாஸ்திரம் கூறுகிறது.
போதையை உட்கொண்டால் செக்ஸ் உறவுநேரம் அதிகரிக்கும் என்ற தவறான கருத்துடன் பலரும் போதையில் ஈடுபடுகிறார்கள். போதைக்கும் செக்ஸ்க்கும் சம்பந்தமில்லை. அதுமட்டுமல்ல தொடர்ந்து போதைப்பழக்கம் நீடித்தால் விந்தணுக்கள் குறையும், வீரியம் குறையும், முழுமையான ஆண்மைக்குறைவில் போய் முடியும்.
செக்ஸ் மனமொத்த மகிழ்ச்சியான அனுபவம் நம் மனதையும் சூழ்நிலையையும் பொறுத்தது. உடலளவில் பார்த்தால் ‘டெஸ்ட்ரோஸன்’ என்னும் ஹார்மோன் அளவைப்பொறுத்தே அமைகின்றது. இது ஆண், பெண் ஒரு பாலாருக்கும் ஏறக்குறைய ஒரே வயதில்தான் சுரக்கிறது. போதைப் பொருள்கள் உடலின் ஹார்மோன்களை வேகமாக சுரக்கச் செய்யும் தன்மை வாய்ந்தவை. இயற்கைக்கு மாறாக நரம்புகளைச் சுண்டிவிடும். அதனால்தான் போதை மருந்து உட்கொண்டு விளையாட்டில் வெற்றி பெறுபவரை வெளியேற்றி விடுகின்றனர்.
அதேபோல் செக்சிலும், போதைப் பொருட்கள் சில நேரங்களில் உணர்ச்சியைத் தூண்டினாலும் தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது, நம் உடல் தன் நிலையை மறந்துவிடத் தொடங்குகிறது. போதைப் பொருட்கள் உணர்ச்சியைத் தூண்டுவது போன்று தெரிந்தாலும் மன நிறைவை ஏற்படுத்தாதது. அதேபோல் உச்சகட்டத்தைப் பெறவும் உதவாது. சமயங்களில், அந்த நிலையையே தடுத்துவிடும் ஆற்றல் படைத்தது. சிகரெட் பிடித்தாலும் பெண்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய பெண்களுக்கு, அவரகளது உறுப்பில் வழவழப்புத் தன்மையை ஏற்படுத்தும் திரவத்தின் அளவைக் குறைத்து வறட்சித் தன்மையை ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணம், சிகரெட்டில் உள்ள ‘நிகோடின்’ ஆகும்.
மன உளைச்சலைக் குறைக்கும் சில மருந்துகளுக்குக் கூட இத்தன்மை உள்ளது. இதுபோன்ற மருந்து வகைகள், ‘சிரோட்டி னின்’ அளவைக் கூட்டுகின்றன. அதேசமயம்,‘டெஸ்ட்ரோன்கள்’ வேலையைக் குறைக்கிறது. ‘டெஸ்ட்ரோனே‘ செக்சைத் தூண்டும் முக்கிய ஹார்மோன் என்பது நாம் அறிந்ததே. அண்மைக் காலங்களில், கருத்தரிப்பைத் தடுக்க பல்வேறு கருத்தடை மருந்துகள் உட்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக ‘புரோஜஸ்டின்’ எனப்படும் மருந்து வகையை உட்கொள்ளும் பொழுது, செக்ஸ் உணர்வு, குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
ஆண்களுக்கு 18 அல்லது 20 வயதில் உள்ள அதே அளவுதான் பெண்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கும். ஆனால் ஆணுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பெண்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. பெண் என்பவள், உடலியல் ரீதியாக, இரண்டாம் பட்சமாகவே கருதப்படுகிறாள். அதன் விளைவாக, கட்டுப்பெட்டித்தனம் ஏற்படுகிறது. பெண்கள், தங்களுடைய செக்ஸ் உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ளவும் முடியாது. போதைப் பொருட்கள் போலவே, மதுவும் உடலின் நரம்புடன் நேரடியாக தொடர்பு கொள்வதால், முதலில் மகிழ்ச்சியாக இருக்கும்.ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, நரம்பு மண்டலத்தை உளையச் செய்துவிடும். குறிப்பாக, பெண்கள் அதிக அளவில் மதுவை உட்கொள்ளும்பொழுது அவர்களை மயக்க மடையச் செய்கிறது. என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல் அவர்களை மாற்றி விடுகின்றது.
செக்சில் உச்சக்கட்டத்தை விருப்ப மற்ற நரம்புமண்டலத்தை தூண்டி ஏற்படுத்தி விடுகிறது. மது நேரடியாகவே அந்த குறிப்பிட்ட மண்டலத்தை தாக்குகின்றது. எனவேதான் “மது அருந்தியவர்களால் இரவில் செக்சில் ஈடுபட முடியும். ஆனால் அதுமுடிந்து மகிழ்ச்சி இருக்குமோ என்று பார்த்தால் சந்தேகமே” என்கிறார் பிரபல மருத்துவ வல்லுநர் சீபர் அவர்கள். அதேபோல், செக்சில் இருவரும் தங்கள் விருப்பங்களைத் தெளிவான முறையில் தெரிவித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், சிக்கல்தான்! சிக்கல் தோன்றிவிட்டால் பிறகு எப்படி முழுமையான இன்பத்தைப் பெறமுடியும்? மன உளைச்சல் ஏற்படும். மன உளைச்சல் ஏற்பட்டால் மற்ற வேலைகளையும் பாதிக்கும். செக்சில் நிறைவைப் பெற விடாமல் தடுக்கக்கூடிய காரணிகளில் ஒன்றான போதைப்பொருள்களை தவிர்ப்பது செக்சிற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பயனளிக்கக் கூடியதாகும்.

No comments:
Post a Comment