Wednesday, July 13, 2011

Sexual Theology

பாலியல் வினோதங்கள்

காம உச்சநிலையை உணர்த்தும் ‘அ’ எழுத்து
 தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் ஆணும், பெண்ணும் கருத்துப் பரிமாற்றத்திற்கென அதிகமாகப் பயன்படும் எழுத்து ‘அ’ ஆகும். எழுத்து வரிசையில் முதலெழுத்து ‘அ’ குறுகி ஒலிக்கும் போது ‘அகரம்’ ஆகவும் நீண்டு ஒலிக்கும்போது ‘ஆகாரம்’ ஆகவும் மாறுகிறது. ‘அ’ எனும் ஒலி பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்து பரிமாற்றத்தை முழுமைப்படுத்துகிறது.
       வியப்பு, மகிழ்ச்சி, உடலுறவில் உச்சநிலை முதலிய உணர்ச்சிகளின் வெளியீடாக ‘அ’ என்ற சத்தம் வெளிப்படுவதுண்டு. பாலியலில் வெளிப்படும் இந்த ‘அ’ ஒலி உலகின் எந்த நாட்டை சார்ந்தவர்களின் ஊடலின் முடிவில் வெளிப்படும் ஒலி இதுவே.

Masculinity stimulating hormone

ஆண்மையைத் தூண்டும் ஹார்மோன்

ஆணுக்குப் பாலியல் இச்சையைத் தூண்டி, உடலுறவு கொள்ள அவனை உந்துவது டெஸ்டோஸ்டிரான் என்னும் ஹார்மோன். இதுதான் ஆணுக்கு ஆண் தன்மையை வழங்குகிறது.
விந்தணுவகத்தில் இரண்டு தனித்தனிப் பகுதிகள் உள்ளன. ஒன்றில் விந்தணு உற்பத்தியாகும். மற்றொன்றில் டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி ஆகும். இந்த ஹார்மோன் உற்பத்தி குறையும்போது ஆணுக்குப் பாலியல் இச்சை குறைய ஆரம்பிக்கும்.

Wednesday, May 11, 2011

Sex and alcohol

                                  மது போதையில் மூழ்கியவரும் செக்ஸ் போதையில் மூழ்கியவரும் மீள்வது கடினம். உண்மை நிலை இப்படியிருக்கும்போது செக்ஸ் போதையை அதிகரிக்க மதுபோதை உதவுவதாக கருதுவது அறியாமை.

       போதைப்பழக்கம் காலம்காலமாய் நீடிக்கிற ஓர் சமூகக்கேடு. மவுரியர்கள் காலத்தில் பலவித போதையூட்டும் பானங்களும் போதையற்ற பானங்களும்

Saturday, April 9, 2011

Schizophrenia

மனச்சிதைவு நோய் 

மனச்சிதைவு நோய் என்பது மிகப் பழங்காலம் முதல் இருந்து வரும் மிகக் கடுமையான மனநோயாகும். மனச்சிதைவு நோயாளர்கள் மக்களால் முன்காலத்தில் துணியின்றி தெருவெங்கும் சுற்றியலைந்து கல்லெறியும் பைத்தியக்காரர்களாக அறியப்பட்டவர்கள் தான். இவர்களைக் குணப்படுத்தத் தெரியாமல் உடலெங்கும் இரும்புச் சங்கிலிகளால் கட்டி பிணைக்கப்பட்டிருந்தார்கள். முதன் முதலில் இவர்களுக்கு ஆசிரமம் அமைத்து,அங்கு மனிதாபிமான முறையில் சிகிச்சை அளிக்க முன் வந்தவர்ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை என்று அறியப்படும்

Sunday, March 6, 2011

Bariatrics -obesity

   அதிகமான உடல் பருமன், அதைத் தடுக்கும் வழிகள், சிகிச்சை முறைகள் இவற்றைப் பற்றிய மருத்துவப்பிரிவிற்கு Bariatrics என்று பெயர். உடலில் உள்ள கொழுப்பு செல்களின் அளவு அதிகரிக்கும்போது உடல் பருமனாகிப் போகிறது. ஒரு சாதாரண உடலில் 30 முதல் 35 பில்லியன் கொழுப்பு செல்கள் இருக்கும். ஒரு பருமனான உடல் எடையை இழக்கும்போது இந்த செல்கள் அளவில் சிறுக்கத் தொடங்கும். ஆனால் செல்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏதும் இருக்காது. இதன் காரணமாகத்தான் ஒரு முறை உடல் பருமனாகிவிட்டால் எடையைக் குறைப்பது கடினமாகிப் போகிறது

Thursday, January 27, 2011

டீன் – ஏஜ் மகளிடம் அப்பா எப்படி நடந்து கொள்ளவேண்டும்

பிள்ளைகளிடம் தலையீட்டிற்கும், அக்கறைக்கும் இடைப்பட்ட ஒரு நடு நிலையை அப்பாக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

எனது நண்பர் தன் 14வயது மகளை எப்பொழுதும் நச்சரித்துக் கொண்டே இருப்பார். “சொல் பேச்சை கேக்குறதில்லை எதை எடுத்தாலும் வாதம் பண்ணிக்கிட்டே இருக்கா” என நச்சரிப்புக்குக் காரணம் கூறுகிறார்.

நண்பர் எதையும் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புகிற மனிதர் அவருடைய இந்த அணுகுமுறை தன் மகளிடம் ஒரு பாதகமான போக்கை உருவாக்கும் என்று அவரிடம் கூறியிருக்கிறேன்.

அந்தப் பெண்ணுக்கு ஒரு பத்து வயது தங்கையும் இருக்கிறாள். அவள் அடக்கமும் கீழ்படியும் குணமும் கொண்டவள். அதனால் தந்தையுடன் அவள் எளிதாக ஒத்துப் போகிறாள். இது மூத்தவளிடம் பொறாமை யையும் எரிச்சலையும் தூண்டுகிறது.

Monday, January 17, 2011

Marriage ----------- Divorce Analysis

தோற்றுப்போகும் திருமணங்கள்

சமுதாயக் கட்டுக்கோப்பைப் பற்றிச் சொல்ல வந்த சிசேரோ (Cicero) “திருமணம் சமுதாயக் கட்டுக்கோப்பின் ஆணிவேர்” என்றான். அன்று தொடங்கி இன்று வரை திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியத் திருமணங்கள் வியக்கத்தக்க பல மாறுதல்களுக்கு ஆளாகியிருக்கின்றன.

இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு நமது நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும்