மனச்சிதைவு நோய்
மனச்சிதைவு நோய் என்பது மிகப் பழங்காலம் முதல் இருந்து வரும் மிகக் கடுமையான மனநோயாகும். மனச்சிதைவு நோயாளர்கள் மக்களால் முன்காலத்தில் துணியின்றி தெருவெங்கும் சுற்றியலைந்து கல்லெறியும் பைத்தியக்காரர்களாக அறியப்பட்டவர்கள் தான். இவர்களைக் குணப்படுத்தத் தெரியாமல் உடலெங்கும் இரும்புச் சங்கிலிகளால் கட்டி பிணைக்கப்பட்டிருந்தார்கள். முதன் முதலில் இவர்களுக்கு ஆசிரமம் அமைத்து,அங்கு மனிதாபிமான முறையில் சிகிச்சை அளிக்க முன் வந்தவர், ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை என்று அறியப்படும்