அதிகமான உடல் பருமன், அதைத் தடுக்கும் வழிகள், சிகிச்சை முறைகள் இவற்றைப் பற்றிய மருத்துவப்பிரிவிற்கு Bariatrics என்று பெயர். உடலில் உள்ள கொழுப்பு செல்களின் அளவு அதிகரிக்கும்போது உடல் பருமனாகிப் போகிறது. ஒரு சாதாரண உடலில் 30 முதல் 35 பில்லியன் கொழுப்பு செல்கள் இருக்கும். ஒரு பருமனான உடல் எடையை இழக்கும்போது இந்த செல்கள் அளவில் சிறுக்கத் தொடங்கும். ஆனால் செல்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏதும் இருக்காது. இதன் காரணமாகத்தான் ஒரு முறை உடல் பருமனாகிவிட்டால் எடையைக் குறைப்பது கடினமாகிப் போகிறது